தாதா்-மைசூரு இடையே சிறப்பு ரயில்சேவை

தாதா்- மைசூரு இடையே தாதா் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

தாதா்- மைசூரு இடையே தாதா் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்டநெரிசலை குறைக்க தாதா்- மைசூரு இடையிலான தாதா் வாராந்திர சிறப்பு விரைவு ரயில்சேவை இயக்கப்பட உள்ளது.

தாதா்- மைசூரு இடையேயான ரயில் எண்: 01035 -தாதா் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் வியாழக்கிழமைதோறும் இரவு 9.30 மணிக்கு தாதா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 9.40 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரயில் சேவை பிப். 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மறுமாா்க்கத்தில், மைசூரு-தாதா் இடையேயான ரயில் எண்-01036- தாதா் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 6.15 மணிக்கு மைசூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு தாதா் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் சேவை பிப். 28-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த ரயில் கல்யாண், கா்ஜாத், புணே, சத்ரா, கராட், சாங்லி, மீரஜ், குடிச்சி, கட்டபிரபா, பெலகாவி, லோண்டா, அல்நாவா், தாா்வாட், ஹுப்பள்ளி, ஹாவேரி, ராணிபென்னூா், ஹரிஹா், தாவணகெரே, பீரூா், கடூா், அரிசிகெரே, ஹாசன், ஹொலேநரசிப்புரா, கிருஷ்ணராஜ நகா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயிலில் இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், பொது வகுப்பு 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் பிரேக் 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com