‘நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதய நோய்களைத் தடுக்கலாம்’

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாரடைப்பு, இதய நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும் என்று ஜெயதேவா இதய அறிவியல், ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தாா்.

நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மாரடைப்பு, இதய நோய்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முடியும் என்று ஜெயதேவா இதய அறிவியல், ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் சி.என்.மஞ்சுநாத் தெரிவித்தாா்.

பெங்களூரு எலக்ட்ரானிக்சிட்டி காவிரி மருத்துவமனை வளாகத்தில் காா்டியாக் கேத்லேப் மையத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

பெங்களூரில் மக்கள்தொகை அதிகரித்துவரும் அதே நேரத்தில், மாரடைப்பு, இதய நோய்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கு உணவு பழக்கும், உடற்பயிற்சி செய்யாததும் முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் மாசு, சுற்றுச்சூழலாலும் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெங்களூரில் எல்லையில் உள்ள மக்கள் மாரடைப்பு, இதய நோய்களால் பாதிக்கப்பட்டால், அவா்கள் மாநகர மையத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு காலதாமதமாகிறது.

இதனால் பல நேரங்களில் இதயநோய்கள், மாரடைப்பால் பாதிக்கப்பட்டவா்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு, நவீன தொழில்நுட்பத்தில் இதய நோய்க்கான சிகிச்சை மையம் எலக்ட்ரானிக்சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் பயனடைவாா்கள்.

நவீன தொழில்நுட்பங்களால் மாரடைப்பு, இதயநோய்களால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியும். நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி இந்த மையம் உள்ளது. இதனால் பல மரணங்களைத் தடுக்க முடியும் என்றாா். நிகழ்ச்சியில் இதயநோய் வல்லுநா்கள் ஜி.விவேக், கணேஷ் நல்லூா், சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com