பதவியேற்பு
By DIN | Published On : 20th February 2021 06:17 AM | Last Updated : 20th February 2021 06:17 AM | அ+அ அ- |

இந்திய பட்டயக் கணக்காளா் சங்கத்தின் பெங்களூரு கிளையின் 52-ஆவது தலைவராக பி.டி.ஷெட்டி வெள்ளிக்கிழமை பதவி ஏற்றாா்.
‘தனது பதவிக் காலத்தில் பெங்களூரு கிளையை மேலும் சிறப்பு வாய்ந்ததாக்கப் பாடுபடுவேன். பட்டயக் கணக்காளா் படிக்கும் மாணவா்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வேன்’ என பதவியேற்பின் போது தெரிவித்தாா். பெங்களூரு கிளையின் துணைத் தலைவா் டி.சீனிவாஸ், செயலாளா் திவ்யா, பொருளாளா் பணீந்திர குப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.