பெங்களூரில் பரவலாக மழை
By DIN | Published On : 20th February 2021 06:16 AM | Last Updated : 20th February 2021 06:16 AM | அ+அ அ- |

பெங்களூரில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த இரண்டொரு நாளாக கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பெங்களூரில் சாந்திநகா், ராஜாஜிநகா், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆா் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகா், சிவாஜிநகா், அல்சூா், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்காா்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகா், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
முக்கால் மணி நேரம் பரவலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவா்கள் அவதிப்பட்டனா். சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டது. மழை வெள்ளத்தால் பெரும்பாலான சாலைகளில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...