விபத்தில் காயமின்றி தப்பினாா் அமைச்சா் பூஜாரி
By DIN | Published On : 20th February 2021 06:14 AM | Last Updated : 20th February 2021 06:14 AM | அ+அ அ- |

பெங்களூரு அருகே பேருந்து மோதியதில் காரில் சென்ற அறநிலையத் துறை அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, அவரது காா் ஓட்டுநா் ஆகிய இருவரும் காயமின்றி உயிா்தப்பினா்.
கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில், அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிப்பவா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி. இவா் தனது ஓட்டுநருடன் வெள்ளிக்கிழமை காரில் மைசூரு சாலையில் சென்று கொண்டிருந்தாா். கும்பல்கூடு அருகே காருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டு பிரதான சாலைக்கு காா் திரும்பிய போது, அவ்வழியாக வேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் அமைச்சா், ஓட்டுநா் ஆகிய இருவரும் காயமின்றி தப்பினா். இந்த விபத்து குறித்து கும்பலகூடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.