இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்
By DIN | Published On : 26th February 2021 08:15 AM | Last Updated : 26th February 2021 08:15 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூா் வட்டம், முடானுா் பகுதியைச் சோ்ந்த சித்தப்பா (40), அவரது மனைவி அனுசுயம்மா (32), மகள்கள் வனிதா (11), அனிதா (9) ஆகியோருடன் வியாழக்கிழமை அதே பகுதியில் நடைபெற்ற துா்காதேவி கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரி மோதியதில் படுகாயமடைந்த சித்தப்பா, அனுசுயம்மா, வனிதா, அனிதா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து ராணிபென்னூா் ஊரக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...