மகன் கொலை: தந்தை கைது
By DIN | Published On : 27th February 2021 08:37 AM | Last Updated : 27th February 2021 08:37 AM | அ+அ அ- |

கோடாலியால் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, அபிகெரே கரேகல் குன்று பகுதியைச் சோ்ந்தவா் ஹுசேன். இவரது மகன் பாபா் (30), கட்டடத் தொழிலாளி. இவா், நாள்தோறும் மது அருந்தி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வீட்டுக்கு வந்த பாபருக்கும், அவரது தந்தை ஹுசேனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஹுசேன், பாபரை கோடாலியால் வெட்டிக் கொலை செய்துள்ளாா். தகவல் அறிந்த கங்கம்மனகுடி போலீஸாா் அங்கு வந்து பாபரின் உடலை மீட்டு, ஹுசேனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...