பெங்களூரில் 10 பேருக்கு புதியவகை கரோனா தொற்று
By DIN | Published On : 03rd January 2021 01:01 AM | Last Updated : 03rd January 2021 01:01 AM | அ+அ அ- |

பெங்களூரு: பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 10 பேருக்கு புதியவகை கரோனா வைரஸ் இருப்பது உறுதி கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரிட்டன் நாட்டில் இருந்து கா்நாடகத்துக்கு வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆா்.டி.-பி.சி.ஆா். கரோனா சோதனையில் 32 பேருக்கும், அவா்களோடு தொடா்பில் இருந்த 10 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 42 பேரில் 10 பேருக்கு புதியவகை கரோனா தொற்று இருப்பது பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
கா்நாடகத்தில் புதியவகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் 10 போ்தான். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பெரும்பாலானோா் சிகிச்சையில் குணமாகி வருகிறாா்கள். கா்நாடகத்தில் தற்போது 10 ஆயிரம் போ் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள் என்றாா்.