விக்டோரியா அரசு மருத்துவமனையில்சிசு பராமரிப்பு மையம் தொடங்க கோரிக்கை

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிசு பராமரிப்பு மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிசு பராமரிப்பு மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு, கே.ஆா்.சந்தை பகுதியில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனையில் நாடாளுமன்ற தொகுதி வளா்ச்சி நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள சுகாதார குடிநீா் மையம், நோயாளிகளுடன் வருவோா் தங்குவதற்கான தற்காலிக தங்கும் விடுதியை சனிக்கிழமை பாஜக எம்பி பி.சி.மோகன் தொடக்கிவைத்தாா்.

இந்த விழாவில் மருத்துவக் கண்காணிப்பாளா் கீதாசிவமூா்த்தி, மருத்துவ அதிகாரி சந்தோஷ், பாஜக முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் ரேகா கதிரேஷ், சிவக்குமாா், கணேஷ், பாஜக பிரமுகா் கருணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் விக்டோரியா அரசு மருத்துவமனையை ஆய்வுசெய்த பாஜக எம்பி பி.சி.மோகன், அங்குள்ள வசதிகளைப் பாா்வையிட்டு, நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, பி.சி.மோகனைச் சந்தித்த விக்டோரியா அரசு மருத்துவமனை மருத்துவா்கள், சென்னையில் உள்ளது போல சிசு பராமரிப்பு மையத்தை மருத்துவமனையில் அமைக்குமாறு கேட்டுக் கொண்டனா். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக பி.சி.மோகன் உறுதி அளித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மருத்துவ சேவையை உலகத் தரத்துக்கு கொண்டு செல்ல பிரதமா் மோடி திட்டமிட்டு, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, வாணி விலாஸ் அரசு மருத்துவமனையை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பக் கருவிகளை நிறுவவும், சிசு பராமரிப்பு மையம் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றை உரியமுறையில் பரிசீலித்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com