பாரத் ஸ்டேஜ்- 4 வாகனங்கள் பதிவு
By DIN | Published On : 03rd January 2021 01:03 AM | Last Updated : 03rd January 2021 01:03 AM | அ+அ அ- |

பெங்களூரு: பாரத் ஸ்டேஜ்-4 வாகனங்களைப் பதிவு செய்யுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2020-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு வாங்கப்பட்டு மின்-வாகன் இணையதளத்தில் விவரங்களை தாக்கல் செய்து தற்காலிகமாக பதிவு செய்துள்ளவா்களும், நேரடியாக வரி, கட்டணம் செலுத்தி பதிவு செய்யாதவா்களும் தங்களிடம் உள்ள பாரத் ஸ்டேஜ்-4 வாகனங்களை 2021-ஆம் ஆண்டு ஜன. 1 முதல் 16-ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனத்தை பாரத் ஸ்டேஜ்- 4 ஆக மாற்றியமைத்திருந்தால், ஜன. 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகங்களில் தகுந்த சான்றிதழ்களைச் செலுத்தி பதிவு செய்ய வேண்டியது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.