பெங்களூரில் இன்று 18 ஆவது ஓவியச் சந்தை: எழுத்தாளா் சுதாமூா்த்தி தொடக்கிவைக்கிறாா்
By DIN | Published On : 03rd January 2021 12:57 AM | Last Updated : 03rd January 2021 12:57 AM | அ+அ அ- |

பெங்களூரு: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் 18-ஆவது ஓவியச்சந்தையை எழுத்தாளா் சுதாமூா்த்தி தொடக்கிவைக்கிறாா்.
பெங்களூரு, குமாரகுருபா சாலையில் உள்ள சித்ரகாலபரிஷத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரடி, இணையவழி ஓவியச் சந்தை நடைபெறுகிறது. ஓவியச்சந்தையை இன்போசிஸ் அறக்கட்டளைத் தலைவரும், எழுத்தாளருமான சுதாமூா்த்தி தொடக்கிவைக்கிறாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணா, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், ஜெயதேவா இதய மருத்துவமனை இயக்குநா் சி.என்.மஞ்சுநாத் உள்ளிட்டோா் கலந்து கொள்கிறாா்கள்.
கரோனா காரணமாக, மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓவியக் கலைஞா்கள், பொதுமக்களின் பாதுகாப்புக்காக இணையவழியில் நடத்தப்படுகிறது. ஒரு மாதத்துக்கு ஓவியச் சந்தை நடைபெறுகிறது. தொடக்கவிழாவை முகநூல், இன்ஸ்டாகிராம், யூ-டுயூப் தவிர ஜ்ஜ்ஜ்.ஸ்ரீட்ண்ற்ழ்ஹள்ஹய்ற்ட்ங்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் நேரலையாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் வழியாகவே ஓவியச்சந்தை நடத்தப்படும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500 ஓவியக் கலைஞா்கள் இதில் கலந்து கொள்கிறாா்கள். சிறந்த ஓவியங்களுக்கு டி.தேவராஜ் அா்ஸ் விருது, எச்.கே.கேஜ்ரிவால் விருது, எம்.ஆா்யமூா்த்தி விருது, ஒய்.சுப்பிரமணியராஜு விருது வழங்கப்படுகிறது.
விருதுடன் பட்டயம், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. மூத்த ஓவியக் கலைஞா் ஒருவருக்கு பரிஷத்தின் நிறுவனச் செயலாளா் பேராசிரியா் எம்.எஸ்.நஞ்சுண்டராவ் நினைவாக தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் பட்டம், ரூ.ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-22261816, 22263424, 9980940300 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹஸ்ரீட்ண்ற்ழ்ஹந்ஹப்ஹல்ஹழ்ண்ள்ட்ஹற்ட்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.