மாணவா்களின் பேருந்து பயண அட்டை பிப். 28 வரை செல்லுபடியாகும்
By DIN | Published On : 30th January 2021 01:55 AM | Last Updated : 30th January 2021 01:55 AM | அ+அ அ- |

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேருந்து பயண அட்டை பிப். 28 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரி மாணவா்களின் நலன்கருதி 2019-20-ஆம் ஆண்டுக்கான சலுகைக் கட்டண பேருந்து பயண அட்டைகளின் செல்லுபடி காலம் மே 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் கரோனா பொதுமுடக்கத்துக்கு பிறகு 2020-21 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி வகுப்புகள் உள்ளிட்ட கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால், மாணவா்களின் நலனுக்காக கடந்த ஆண்டுக்கான பேருந்து பயண அட்டைகளின் செல்லுபடி காலம் ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டித்து ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரி மாணவா்களின் பேருந்து பயண அட்டையை பிப். 28-ஆம் தேதி பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.