பயணிகளின் வருகை குறைவால் ரத்து செய்யப்பட்ட சில ரயில்கள் மீண்டும் இயக்கம்
By DIN | Published On : 07th July 2021 11:20 PM | Last Updated : 07th July 2021 11:20 PM | அ+அ அ- |

பயணிகளின் வருகை குறைந்ததால் ரத்து செய்யப்பட்ட ஒரு சில ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
பயணிகளின் வருகை குறைந்ததால், பெங்களூரு யஸ்வந்தபுரம்-மங்களூரு சந்திப்பு (06539/ 06540), (06575/ 06576) இடையிலான விரைவு ரயில்கள், ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பொது முடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டிருப்பதால், பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ரத்து செய்யப்பட்ட இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
மங்களூரு சந்திப்பு-பெங்களூரு யஸ்வந்தபுரம் விரைவு ரயில் (06540) ஜூலை 11-ஆம் தேதி மங்களூரு சந்திப்பிலிருந்து புறப்பட உள்ளது. அதேபோல பெங்களூரு யஸ்வந்தபுரம்-மங்களூரு சந்திப்பு விரைவு ரயில் (06539) ஜூலை 17-ஆம் தேதி முதல் பெங்களூரு யஸ்வந்தபுரத்திலிருந்து புறப்பட உள்ளது.
பெங்களூரு யஸ்வந்தபுரம்-மங்களூரு சந்திப்பு விரைவு ரயில் (06575) ஜூலை 13-ஆம் தேதி முதல் பெங்களூரு யஸ்வந்தபுரத்திலிருந்து புறப்பட உள்ளது. மங்களூரு சந்திப்பு-பெங்களூரு யஸ்வந்தபுரம் விரைவு ரயில் (06576) ஜூலை 14-ஆம் தேதி மங்களூரு சந்திப்பிலிருந்து புறப்பட உள்ளது.
பெங்களூரு யஸ்வந்தபுரம்-மங்களூரு சந்திப்பு வரையிலான (06539/06540) ஆகிய ரயில்களில் 2 விஸ்டா டோம் பெட்டிகள் (ஜன்னலுக்கு பதிலாக கண்ணாடிகள் பொருத்தப்பட்ட பெட்டிகள்) இணைக்கப்படும். இதன் மூலம் அந்த பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...