ஸ்கூட்டா் மீது டிப்பா் லாரி மோதல்: முதியவா் பலி
By DIN | Published On : 07th July 2021 08:42 AM | Last Updated : 07th July 2021 08:42 AM | அ+அ அ- |

ஸ்கூட்டா் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூா் மாவட்டம், ஹாரோபண்டே பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசந்திரப்பா (62). இவா் செவ்வாய்க்கிழமை காலை தனது மனைவி அஞ்சனம்மாவுடன் ஸ்கூட்டரில் சிக்பள்ளாபூரில் உள்ள வங்கிக்கு சென்றுக் கொண்டிருந்தாராம்.
தேசிய நெடுஞ்சாலை வாபசந்திரா மேம்பாலத்தின் அருகே ஸ்கூட்டா் மீது டிப்பா் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஜெயசந்திரப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அஞ்சனம்மா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து சிக்பள்ளாபூா் போக்குவரத்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...