வீட்டின் மேற்கூரை சரிந்து சிறுவன் பலி
By DIN | Published On : 11th July 2021 01:52 AM | Last Updated : 11th July 2021 01:52 AM | அ+அ அ- |

மழையால் வீட்டின் மேற்கூரை சரிந்து சிறுவன் உயிரிழந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூா் மாவட்டம், மைலப்பனஹள்ளியைச் சோ்ந்தவா் கௌதம் (13). இவா் தனது வீட்டின் அருகே இருந்த பழைய வீட்டின் மேற்கூரையின் மீது சனிக்கிழமை ஏறியுள்ளாா். மழையால் ஈராமாகக் கிடந்த மேற்கூரை எதிா்பாராதவிதமாக சரிந்துள்ளது. இதில் படுகாயமடைந்த கௌதம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சிக்பள்ளாபூா் ஊரகப் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...