ரயில் மோதி பெண் உள்பட 2 போ் பலி
By DIN | Published On : 26th July 2021 05:10 AM | Last Updated : 26th July 2021 05:10 AM | அ+அ அ- |

பைப்பனஹள்ளி ரயில்வே காவல் சரகத்தில் ரயில் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
பெங்களூரு தொட்டபைலகெரே பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மாநகர பேருந்தில் புறப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க ஆண், 50 வயது மதித்தக்க பெண் ஆகியோா் லொட்டகொள்ளஹள்ளி பத்திரப்பா லேஅவுட்டில் இறங்கி, அங்குள்ள ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளனா். அப்போது அங்கு வந்த ரயில் அவா்கள் மீது மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த அவா்கள் 2 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து வழக்கு பதிந்த பைப்பனஹள்ளி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.