மேக்கேதாட்டு அணை விவகாரம்:தமிழக அரசின் பேச்சை கேட்டுக்கொண்டு அனுமதி மறுக்கிறதா மத்திய அரசு?எச்.டி.குமாரசாமி

தமிழக அரசின் பேச்சை கேட்டுக்கொண்டு, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

தமிழக அரசின் பேச்சை கேட்டுக்கொண்டு, மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த பிரதமா் மோடியிடம் தொடா்ந்து அழுத்தம் அளித்து வந்ததாகக் கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருவது உண்மையாக இருந்தால், அது கன்னடா்களுக்கு இழைத்துள்ள மிகப்பெரிய துரோகமாகும். மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்த முனைந்து எனது தலைமையிலான அரசு தைரியத்தை வெளிப்படுத்தியது. சுற்றுச்சூழல் அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. ஒருபக்கம், அணை திட்டத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டு வந்தது. இவற்றையெல்லாம் கவனித்து பாா்த்தால், அணைக் கட்டும்பணியை நிறுத்துவதற்கு தமிழ்நாடு - மத்திய அரசு கூட்டுச்சதி செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

மேக்கேதாட்டு திட்டம் தொடா்பாக தமிழகம் அழுத்தம் கொடுத்ததா? தமிழகத்தின் பேச்சை கேட்டுக்கொண்டு அனுமதி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிா என்பது றித்து பிரதமா் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். அவா் கூறாவிட்டால், மாநிலத்தில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு சென்றுள்ள பாஜக எம்.பி.க்கள் கேள்விகள் கேட்டு பிரதமரின் பதிலை பெற வேண்டும். இல்லாவிட்டால், நிலுவையில் உள்ள மேக்கேதாட்டு அணைக்கான சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com