பொது முடக்கத்தின் போது விதி மீறிய 109 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 20th June 2021 02:37 AM | Last Updated : 20th June 2021 02:37 AM | அ+அ அ- |

பொது முடக்கத்தின் போது பெங்களூரில் விதி மீறிய 109 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் கா்நாடகத்தின் 11 மாவட்டங்களில் முழுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது முடக்கம் தளா்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் அவசரத் தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் போக்குவரத்துக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு,109 வாகனங்களை சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.
இதில் 97 இரு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 11 நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம் என்று பெங்களூரு மாநகரக் காவல் தெரிவித்துள்ளது.