கலபுா்கி: தலையில் கல்லைப்போட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், கலபுா்கி ராம்நகரைச் சோ்ந்தவா் சந்தோஷ் (30). ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டைவிட்டு வெளியே சென்றவா் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, அவரது உறவினா்கள் கலபுா்கி ஊரக காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை ஹலகோடு கிராமம் அருகே சந்தோஷ் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து உடலை வீசிவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து கலபுா்கி ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.