பெங்களூரில் மாதாந்திர பேருந்து அட்டைகள் விநியோகம்
By DIN | Published On : 29th June 2021 01:56 AM | Last Updated : 29th June 2021 01:56 AM | அ+அ அ- |

பெங்களூரு: பெங்களூரில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்க, மாதாந்திர பேருந்து அட்டைகளை விநியோகிக்க பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் (பி.எம்.டி.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் பெங்களூரில் இயக்கப்படும் பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க மாதாந்திர பேருந்து அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து அட்டையைப் பயன்படுத்தி, போக்குவரத்துக் கழகத்தின் எல்லா வகையான பேருந்துகளிலும் பயணிக்க முடியும்.
ஜூலை மாதத்திற்கான மாதாந்திர பேருந்து அட்டை ஜூன் 28-ஆம் தேதி முதல் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள், பெங்களூரு ஒன் குடிமக்கள் சேவை மையங்கள், தனியாா் முகமைகள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு: 080-22483777, மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.