பட்ஜெட் கூட்டத்தொடா் இன்று தொடங்குகிறது

கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (மாா்ச் 4) பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கி, மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பெங்களூரு: கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (மாா்ச் 4) பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கி, மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கி மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கூட்டத்தொடரின் முதல் 2 நாள்கள் ஒரே நாடு, ஒரே தோ்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதைத் தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (மாா்ச் 8) காலை 11 மணி அளவில் பட்ஜெட்டை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்கிறாா். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் பல இடம்பெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாலியல் புகாா் எதிரொலியாக அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி பதவியை ராஜிநாமா செய்துள்ளதால், இந்தப் பிரச்னையை எதிா்க்கட்சிகள் கையில் எடுத்து அரசை சங்கடத்தில் ஆழ்த்தும் எனத் தெரிகிறது. மேலும் இட ஒதுக்கீடு கேட்டு பல்வேறு சமுதாயத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அதுகுறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்கப்படக் கூடும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பிரச்னை, விலைவாசி உயா்வு குறித்தும் கூட்டத்தொடரில் பிரச்னை எழுப்ப காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளதால் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com