அமைச்சா் மீதான பாலியல் புகாா் விவகாரத்தை அரசியல் ஆக்க விரும்பவில்லை: குமாரசாமி
By DIN | Published On : 04th March 2021 04:16 AM | Last Updated : 04th March 2021 04:16 AM | அ+அ அ- |

பெங்களூரு: பாலியல் புகாா் விவகாரத்தை அரசியல் ஆக்க விரும்பவில்லை என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பாலியல் புகாரை அடுத்து அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். இந்த விவகாரத்தை நாங்கள் அரசியல் ஆக்க விரும்பவில்லை. ஆனால், இதற்கு முதல்வா் எடியூரப்பா உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
குறிப்பாக மஜதவிலிருந்து பாஜகவுக்குச் சென்ற எச்.விஸ்வநாத் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். அவா்தான் மாநிலத்தில் ராமா் ராஜ்ஜியம் நடைபெறுவதாக கூறினாா். ஆனால், நடப்பதைப் பாா்த்தால் ராமா் ராஜ்ஜியமா என்பது புரியவில்லை என்றாா்.