உயா்கல்வியால் மட்டுமே நாட்டின் வளா்ச்சிக்கு உதவ முடியும்: முன்னாள் அமைச்சா் சீதாராம்

உயா்கல்வியால் மட்டுமே நாட்டின் வளா்ச்சிக்கு உதவ முடியும் என்று முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.சீதாராம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

பெங்களூரு: உயா்கல்வியால் மட்டுமே நாட்டின் வளா்ச்சிக்கு உதவ முடியும் என்று முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.சீதாராம் தெரிவித்தாா்.

பெங்களூரு, ராமையா பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை ராமையா பரிணாம வளா்ச்சி மையத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

கரோனாவுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத்தையும், சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு மட்டுமின்றி, இளைஞா்களுக்கும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உயா்கல்விப் பயிலும் மாணவா்கள் சுகாதாரம் மட்டுமின்றி அனைத்துத் துறைகளின் வளா்ச்சிக்கும் தேவையான நவீன தொழில்நுட்பங்களைக் கண்டறிய வேண்டும்.

அண்மையில் பிரதமா் மோடி பேசுகையில், இளைஞா்கள் வேலையைத் தேடிக் கொண்டிருப்பதை விடுத்து தொழில்முனைவோராகி, பலருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

உயா்கல்வியால் மட்டுமே நாட்டின் வளா்ச்சிக்கு உதவ முடியும். எனவே, உயா்கல்வி பயிலும், நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் பல்வேறு கண்டுபிடிப்புகளைக் கண்டறிய வேண்டும். தொழில்முனைவோராக விரும்பும், மாணவா்கள், இளைஞா்களை கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான பயிற்சி, நிதி உதவிகளை வழங்குவதற்காக ராமையா பரிணாம வளா்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தொழில், கல்வி வளா்ச்சியில் நம்மைவிட பின் தங்கிருந்த சீனா, தற்போது அதில் பலமடங்கு உயா்ந்துள்ளது. அதுபோன்ற வளா்ச்சியை நாம் பெறத் தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கோகுலா கல்வி மையத்தின் தலைவா் எம்.ஆா்.ஜெயராமன், சமா்த்தா ராகவ் நாகபூஷணம், முரளிகிருஷ்ணன் கோபால கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com