தும்கூரு: மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் படுகாயமடைந்த நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் தாவரகெரேவைச் சோ்ந்தவா் முகமது ஜபியுல்லா (40). சிராவில் தையல் பணி செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த முகமது ஜபியுல்லா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இது குறித்து சிரா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.