மைசூரு-ரேணிகுன்டா இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் சேவை
By DIN | Published On : 04th March 2021 04:16 AM | Last Updated : 04th March 2021 04:16 AM | அ+அ அ- |

பெங்களூரு: மைசூரு-ரேணிகுன்டா இடையே வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் சேவை இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மைசூரு-ரேணிகுன்டா ரயில் நிலையங்கள் இடையே (01065/01066) வாராந்திர சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ரயில் எண்: 01065, மைசூரு-ரேணிகுன்டா இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில், மாா்ச் 5-ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.55 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.25 மணிக்கு ரேணிகுன்டா ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் ரயில் எண்: 01066, ரேணிகுன்டா-மைசூரு இடையேயான வாராந்திர சிறப்பு விரைவு ரயில் மாா்ச் 6-ஆம்தேதி முதல் சனிக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு ரேணிகுன்டா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.50 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயில் இரு மாா்க்கங்களிலும் காட்பாடி, ஜோலாா்பேட்டை, கன்டோன்மென்ட், கே.எஸ்.ஆா். பெங்களூரு, கெங்கேரி, மண்டியா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரயிலில் ஈரடுக்கு குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டி, மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 3 பெட்டிகள், 2-ஆம் வகுப்புப் படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 3 பெட்டிகள், உணவு, சரக்கு வசதி கொண்ட 2 பெட்டிகள் உள்ளிட்ட 17 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.