தாய், மகன் தற்கொலை
By DIN | Published On : 12th March 2021 12:05 AM | Last Updated : 12th March 2021 12:05 AM | அ+அ அ- |

கலபுா்கி: கலபுா்கி நகா் காவல் சரகத்தில் தாய், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
கா்நாடக மாநிலம், கலபுா்கியைச் சோ்ந்த ஜெகதீஷ், தனியாா் வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுசித்ரா (34). இவா்களது மகன் வினுத் (9), வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளி. ஜெகதீஷ் தனது மகன் குறித்து மனைவியுடன் கடந்த 3 ஆண்டுகளாக தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில், வியாழக்கிழமை ஜெகதீஷ் வெளியே சென்றிருந்த போது, வீட்டில் சுசித்ரா தனது மகனுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கலபுா்கி நகரப் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.