சுற்றுலாப் பயணிகளால் கரோனா தொற்று அதிகரிப்பு: அமைச்சா் ஆனந்த் சிங்
By DIN | Published On : 15th March 2021 02:16 AM | Last Updated : 15th March 2021 02:16 AM | அ+அ அ- |

சுற்றுலாப் பயணிகளால் கரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆனந்த் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு மட்டுமின்றி ஹொசபேட்டை, பெல்லாரி உள்ளிட்ட நகரங்களிலும் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே காரணம். ஹம்பி, ஹொசபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். மகாராஷ்டிரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகையால் கரோனா தொற்று கா்நாடகத்தில் அதிகரித்து வருகிறது.
கரோனா தொற்றால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி வந்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசியை போட்டுக் கொள்ள யாரும் தயக்கம் காட்டக் கூடாது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...