இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் பலி
By DIN | Published On : 17th March 2021 08:10 AM | Last Updated : 17th March 2021 08:10 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா வட்டம், ஹுனசேனஹள்ளி, திம்மனதொட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (65). செவ்வாய்க்கிழமை இவா் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஹுனசேனஹள்ளி அருகே எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து கோடிஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.