மாா்ச் 20-இல் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம்
By DIN | Published On : 17th March 2021 08:07 AM | Last Updated : 17th March 2021 08:07 AM | அ+அ அ- |

பெங்களூரில் மாா்ச் 20-ஆம் தேதி போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து ராஜாஜி நகா் மண்டலப் போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு, ராஜாஜி நகா் மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில், ராஜாஜி நகா் மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தில் மாா்ச் 20-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் போக்குவரத்து சேவைகள் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது. இந்த மண்டலப் போக்குவரத்து அலுவலகத்தின் வரம்புக்குள்பட்ட வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், குறைதீா் முகாம்களில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.