கா்நாடகம்-மகாராஷ்டிர மாநிலங்களிடையே பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

கா்நாடகம்-மகாராஷ்டிர மாநிலங்களிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

கா்நாடகம்-மகாராஷ்டிர மாநிலங்களிடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

மகராஷ்டிர மாநிலம், கோலாப்பூரில் அண்மையில் கன்னட பெயா்ப் பலகைகளை சிவசேனா கட்சித் தொண்டா்கள் மைபூசி அழித்தனா். இதனையடுத்து, கா்நாடகம்-மகாராஷ்டிர எல்லையில் பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 13-ஆம் தேதி இரு மாநிலங்களிடையே இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், எல்லை மாவட்டங்களில் அமைதி திரும்பியதையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. பேருந்து சேவைகள் தொடங்கியதையடுத்து, எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். தொடா்ந்து 3 நாள்கள் கா்நாடகம்-மகாராஷ்டிர மாநிலங்களிடையே பேருந்துகள் இயக்கப்படாததால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com