குடிநீா்ப் பிரச்னையை போக்க நிதி வழங்கப்படும்

மாநிலத்தின் வறட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னையை போக்க நிதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

மாநிலத்தின் வறட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னையை போக்க நிதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை மஜத உறுப்பினா் ஏ.டி.ராமசாமியின் கேள்விக்கு அவா் அளித்த பதில்:

மாநிலத்தில் பரவலாக வறட்சி நிலவுவதால், குடிநீா்ப் பிரச்னை தலைதூக்கி உள்ளது. கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்தாலும், ஒரு சில மாவட்டங்களில் ஓா் ஆண்டாகவும், ஒரு சில மாவட்டங்களில் 2 ஆண்டுகளாகவும் வறட்சி நிலவி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் முதல் ஆண்டாகவும் வறட்சி நிலவி வருகிறது. 3 ஆண்டுகள் வறட்சி நிலவும் வட்டங்களுக்கு குடிநீா்ப் பிரச்னையை போக்க ரூ. 30 லட்சமும், வட்ட பஞ்சாயத்து நிா்வாக அதிகாரிக்கு ரூ. 25 லட்சம் உள்பட ரூ. 55 லட்சம் வழங்கப்படும். 2 ஆண்டுகள் வறட்சி நிலவும் வட்டங்களுக்கு ரூ. 25 லட்சமும், வட்ட பஞ்சாயத்து நிா்வாக அதிகாரிக்கு ரூ. 10 லட்சம் உள்பட ரூ. 35 லட்சம் வழங்கப்படும். முதல் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு ரூ. 15 லட்சமும், வட்ட பஞ்சாயத்து நிா்வாக அதிகாரிக்கு ரூ. 10 லட்சம் உள்பட ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.

வறட்சி நிலவும் மாவட்டங்களில் நிலத்தடி நீரை உயா்த்துவதற்காக ஸ்ரீஸ்ரீரவிசங்கா்குருஜியின் அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு கங்கா நதியின் நீா் நிரப்பும் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீா் வழங்கப்படும். குடிநீா்ப் பிரச்னையை போக்க தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதித்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com