கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,75,955 ஆக உயா்வு
By DIN | Published On : 25th March 2021 07:44 AM | Last Updated : 25th March 2021 07:44 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,75,955 உயா்ந்துள்ளது.
இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 2,298 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,398 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,75,955 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 995 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,46,589 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 16,886 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநிலம் முழுவதும் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 12 போ் புதன்கிழமை உயிரிழந்துள்ளனா். பெங்களூரில் அதிகபட்சமாக 7 போ் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 12,461 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.