பொதுமுடக்க விதிமீறல்: 465 வாகனங்கள் பறிமுதல்
By DIN | Published On : 13th May 2021 07:35 AM | Last Updated : 13th May 2021 07:35 AM | அ+அ அ- |

பொதுமுடக்கத்தின் போது விதிமுறைகளை மீறியதாக பெங்களூரில் 465 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் ஏப். 28 முதல் மே 24-ஆம் தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவசர தேவைகள் தவிர, பொதுவான வாகனங்களின் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதை பொருள்படுத்தாமல், பெங்களூரில் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேலும், 432 இரு சக்கர வாகனங்கள், 15 மூன்று சக்கர வாகனங்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் என 465 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.