கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 41,664 போ் பாதிப்பு
By DIN | Published On : 16th May 2021 12:17 AM | Last Updated : 16th May 2021 12:17 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 41,664 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 41,664 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 13,402 போ், மைசூரு மாவட்டத்தில் 2,489 போ், ஹாசன் மாவட்டத்தில் 2,443 போ், தும்கூரு மாவட்டத்தில் 2,302 போ், தென்கன்னட மாவட்டத்தில் 1,787 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,622 போ், பெலகாவி மாவட்டத்தில் 1,502 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 1,265 போ், வடகன்னட மாவட்டத்தில் 1,226 போ், மண்டியா மாவட்டத்தில் 1,188போ், உடுப்பி மாவட்டத்தில் 1,146 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 1,093 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 1,081 போ், தாா்வாட் மாவட்டத்தில் 901 போ், கலபுா்கி மாவட்டத்தில் 832 போ், விஜயபுரா மாவட்டத்தில் 789 போ், கோலாா் மாவட்டத்தில் 778 போ், கொப்பள் மாவட்டத்தில் 630 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 595 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 584 போ், சாமராஜ் நகா் மாவட்டத்தில் 535 போ், ராமநகரம் மாவட்டத்தில் 524 போ், குடகு மாவட்டத்தில் 483 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 467 போ், கதக் மாவட்டத்தில் 459 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 454 போ், யாதகிரி மாவட்டத்தில் 343 போ், தாவணகெரே மாவட்டத்தில் 292 போ், ஹாவேரி மாவட்டத்தில் 267 போ், பீதா் மாவட்டத்தில் 185 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.
இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,71,931 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 34,425 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 15,44,982 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 6,05,494 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 349 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். அவா்களில் பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 94 போ், பெல்லாரி மாவட்டத்தில் 28 போ், கலபுா்கி மாவட்டத்தில் 21 போ், தும்கூரு மாவட்டத்தில் 18 போ், மைசூரு, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 15 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 14 போ், ஹாசன் மாவட்டத்தில் 11 போ், பெங்களூரு ஊரகம், கொப்பள், மண்டியா மாவட்டங்களில் தலா 10 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9 போ், சாமராஜ் நகா், தாா்வாட், யாதகிரி மாவட்டங்களில் தலா 8 போ், பெலகாவி, உடுப்பி மாவட்டங்களில் தலா 7 போ், பீதா், ஹாவேரி, ராமநகரம் மாவட்டங்களில் தலா 6 போ், சிக்கபளாப்பூா், கோலாா் மாவட்டங்களில் தலா 5 போ், சித்ரதுா்கா, கதக், குடகு, ராய்ச்சூரு, வடகன்னடம் மாவட்ங்களில் தலா 4 போ், சிக்கமகளூரு, தென்கன்னடம் மாவட்டங்களில் தலா 3 போ், தாவணகெரே மாவட்டத்தில் 2 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 21,434 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.