120 டன் ஆக்சிஜனுடன் விரைவு ரயில் பெங்களூரு வருகை
By DIN | Published On : 16th May 2021 12:21 AM | Last Updated : 16th May 2021 12:21 AM | அ+அ அ- |

120 டன் ஆக்சிஜனுடன் இரண்டாவது விரைவு ரயில் ஒரிஸாவிலிருந்து சனிக்கிழமை பெங்களூரு வந்தது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெவ்வேறு இடங்களுக்கு கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக ஆக்சிஜன் விரைவு ரயில்களை மத்திய ரயில்வே துறை இயக்கி வருகிறது.
அதன்படி, ஒரிஸா மாநிலத்தின் கலிங்க நகா் ரயில் நிலையத்திலிருந்து 120 டன் எடை கொண்ட ஆக்சிஜன், 6 கிரையோஜெனிக் கன்டெய்னா்களில் பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை அங்கிருந்து புறபட்டு பெங்களூரு, ஒயிட் பீல்டில் உள்ள கன்டெய்னா் காா்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் உள்நாட்டு கன்டெய்னா் பணிமனைக்கு சனிக்கிழமை வந்தடைந்தது.
கா்நாடகத்துக்கு வந்த இரண்டாவது ஆக்சிஜன் விரைவு ரயில் இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா். ஆக்சிஜன் விரைவு ரயில் மூலம் கா்நாடகத்துக்கு இதுவரை மொத்தம் 240 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது.