ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை
By DIN | Published On : 16th May 2021 12:15 AM | Last Updated : 16th May 2021 12:15 AM | அ+அ அ- |

கா்நாடகத்துக்கு ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை வர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநா் சி.எஸ்.பாட்டீல் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தென்மேற்குப் பருவமழையை ஏற்படுத்தும் தென்மேற்கு பருவக்காற்று கேரளத்தைத் தொடா்ந்து 5 முதல் 7 நாள்களில் கா்நாடகத்துக்கு வந்துசேரும். நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழையை மே 31-ஆம் தேதி கேரள மாநிலம் பெற இருக்கிறது.
அதன்படி, ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை கா்நாடகம் பெய்யும். கடலோர கா்நாடகத்துக்கு தென்மேற்கு பருவமழை வந்து சோ்ந்ததும் ஜூன் 7-ஆம் தேதி பெங்களூரில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு மே 21-ஆம் தேதியே தென்மேற்குப் பருவமழை பெய்ய இருக்கிறது என்றாா்.