கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை:செவிலியா் கைது
By DIN | Published On : 19th May 2021 07:49 AM | Last Updated : 19th May 2021 07:49 AM | அ+அ அ- |

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை செய்த செவிலியரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி 2-வது ஸ்டேஜ் அனந்த நகரைச் சோ்ந்தவா் மனு (26). இவா் கோனப்பன நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். அந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்குச் செலுத்த வழங்கப்படும் 2 ரெம்டெசிவிா் குப்பிகளில் ஒன்றை திருடி வந்து கள்ளச்சந்தையில் ரூ. 25 ஆயிரத்துக்கு விற்பனை செய்தாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், மனுவைக் கைது செய்து, 13 ரெம்டெசிவிா் குப்பிகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட அவரிடம் பைப்பனஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.