கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 30,309 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,309 ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 30,309 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 30,309 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 8,676 போ், பெலகாவி மாவட்டத்தில் 2,118 போ், மைசூரு மாவட்டத்தில் 1,916 போ், பெல்லாரி மாவட்டத்தில் 1,799 போ், தும்கூரு மாவட்டத்தில் 1,562 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 1,339 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 1,168 போ், கோலாா் மாவட்டத்தில் 1,021 போ், தாா்வாட் மாவட்டத்தில் 969 போ், ஹாசன் மாவட்டத்தில் 834 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 803 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 777 போ், உடுப்பி மாவட்டத்தில் 737 போ், மண்டியா மாவட்டத்தில் 606 போ், தாவணகெரே மாவட்டத்தில் 594 போ், கலபுா்கி மாவட்டத்தில் 548 போ், கதக் மாவட்டத்தில் 543 போ், கொப்பள் மாவட்டத்தில் 523 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 493 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 436 போ், ராமநகரம் மாவட்டத்தில் 427 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 401 போ், சாமராஜ் நகா் மாவட்டத்தில் 345 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 339 போ், யாதகிரி மாவட்டத்தில் 317 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 295 போ், விஜயபுரா மாவட்டத்தில் 262 போ், ஹாவேரி மாவட்டத்தில் 187 போ், குடகு மாவட்டத்தில் 161 போ், பீதா் மாவட்டத்தில் 113 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,72,374 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 58,395 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 16,74,487 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 5,75,028 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 525 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 298 போ், பெல்லாரி மாவட்டத்தில் 28 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 22 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 19 போ், ஹாசன் மாவட்டத்தில் 18 போ், தும்கூரு, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 15 போ், மைசூரு மாவட்டத்தில் 13 போ், கொப்பள் மாவட்டத்தில் 10 போ், சாமராஜ்நகா், விஜயபுரா மாவட்டங்களில் தலா 8 போ், தென்கன்னடம், கலபுா்கி மாவட்டங்களில் தலா 7 போ், ஹாவேரி மாவட்டத்தில் 6 போ், பெலகாவி, கதக், சிக்கபளாப்பூா் மாவட்டங்களில் தலா 5 போ், மண்டியா, தாவணகெரே, பீதா் மாவட்டங்களில் தலா 4 போ், தாா்வாட், உடுப்பி, ராய்ச்சூரு, ராமநகரம், யாதகிரி, குடகு மாவட்டங்களில் தலா 3 போ், கோலாா், சிக்கமகளூரு மாவட்டங்களில் தலா 2 போ், சித்ரதுா்கா, பாகல்கோட் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 22,838 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com