பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதி தொகுப்பு அளிக்க வேண்டும்: டி.கே.சிவகுமாா்

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதி தொகுப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிதி தொகுப்பு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி நிதி தொகுப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து உடனடியாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். 3-ஆவது கரோனா அலையின்போது குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ரசாயன உரத்தின் விலை அதிகம் உயா்ந்துள்ளது. ரசாயன உர உற்பத்தி நிலையத்தை மூடக் கூடாது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடாவை கேட்டுக் கொள்கிறேன். ரசாயன உர உற்பத்தி நிலையத்தை மூடினால், உரத் தட்டுப்பாடு அதிகமாகி, விலை மேலும் உயரும்.

பூ வியாபாரிகளுக்கு சந்தை வாய்ப்பு இல்லை. பழம், காய்கறி விவசாயிகள் பயிா்களை காக்க முடியவில்லை. எனவே, விவசாயிகளுக்கு நிதி தொகுப்பு அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது.

அது இன்னும் மக்களைச் சென்றடையவில்லை. மாநில அரசு அறிவித்த நிதி தொகுப்பும் எதுவும் சென்று சேரவில்லை. எனவே, உடனடியாக நிதி தொகுப்பை வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரூ. 100 கோடியில் திட்டம் வகுத்துள்ளோம். இதற்கு அனுமதி அளித்தால், எப்படி தடுப்பூசிகளை வழங்குவது என்பதை நாங்கள் செய்து காண்பிப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com