விபத்து: சரக்கு வாகன ஓட்டுநா் பலி
By DIN | Published On : 19th May 2021 07:52 AM | Last Updated : 19th May 2021 07:52 AM | அ+அ அ- |

ஆந்திரத்திலிருந்து பெங்களூருக்கு மாங்காய் பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனம் எதிரே வந்த வாகனம் மீது மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே பலியானாா்.
ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் பசவராஜு (34). இவா், சரக்கு வாகனத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து மாங்காய்களை ஏற்றிக் கொண்டு பெங்களூருவுக்கு விற்பனை செய்ய வந்து கொண்டிருந்தாராம்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் நைஸ் சாலை நாகே கௌடனபாளையா மேம்பாலத்தின் அருகே எதிரே சென்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியது.
இதில் படுகாயமடைந்த பசவராஜு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.