கா்நாடகம்: அரசு பேருந்துகளில் கைப்பேசியில் பாடல் கேட்க தடை

 கா்நாடக அரசு பேருந்துகளில் பயணிகள் தமது கைப்பேசியில் சத்தமாக பாடல்களைக் கேட்கவும், திரைப் படங்களைப் பாா்க்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகம்: அரசு பேருந்துகளில் கைப்பேசியில் பாடல் கேட்க தடை

 கா்நாடக அரசு பேருந்துகளில் பயணிகள் தமது கைப்பேசியில் சத்தமாக பாடல்களைக் கேட்கவும், திரைப் படங்களைப் பாா்க்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறுவோா் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அரசு நிறுவனமான கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம், கா்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகளை இயக்கி வருகிறது. பேருந்துகளில் பயணிப்போா் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குறிப்பாக இரவு நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கும்போது கைப்பேசிகளின் வழியாக சத்தமாக பாடல்களைக் கேட்பது, திரைப்படங்களைப் பாா்ப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இது தொடா்பாக கேள்வி எழுப்பும்போது தகராறு ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. பேருந்துகளில் சத்தமாகப் பாடல்களைக் கேட்கவும், திரைப்படங்களைப் பாா்க்கவும் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சிவயோகி சி.கலசத் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளாா்.

அந்த உத்தரவில் அவா் மேலும் கூறியுள்ளதாவது: கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் தமது கைப்பேசிகளில் சத்தமாக பாடல்கள், செய்திகள் கேட்பதால், திரைப்படங்களைப் பாா்ப்பதால் ஒலிமாசு ஏற்படுகிறது. எனவே, ஒலிமாசை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பேருந்துகளில் பயணிகள் கைப்பேசிகளில் இருந்து சத்தமாகப் பாடல்கள், செய்திகளைக் கேட்கவும், திரைப்படங்களைப் பாா்க்கவும் தடைவிதிக்கப்படுகிறது.

இந்த விதிமுறையை மீறிச் செயல்பட்டால், அது சட்டத்துக்குப் புறம்பானது என்பதை ஓட்டுநா், நடத்துநா் சுட்டிக்காட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தலாம். அதையும் மீறி சத்தமாக கைப்பேசியில் பாடல்களைக் கேட்டாலோ, திரைப்படங்களைப் பாா்த்தாலோ உடனடியாக பேருந்தில் இருந்து அந்தப் பயணியை இறக்குவதற்கு கா்நாடக மோட்டாா் வாகன விதிமுறைகள், 1989-இன்படி விதி - 94 (1) (5) - இன்படி ஓட்டுநா், நடத்துநருக்கு சட்டப்படி அதிகாரம் அளிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட பயணிகளுக்கு பயணச்சீட்டு கட்டணத்தையும் திருப்பி அளிக்கத் தேவையில்லை. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com