பெங்களூரு பவர்கிரிட் தலைமை அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி ஏற்பு
By DIN | Published On : 27th October 2021 06:21 PM | Last Updated : 27th October 2021 06:21 PM | அ+அ அ- |

பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஈடுபட்ட இந்திய பவர்கிரிட் கழக அதிகாரிகள், ஊழியர்கள்.
பெங்களூருவில் உள்ள பவர்கிரிட் அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நாடு முழுவதும் 'சுதந்திர இந்தியா-75: நேர்மையுடன் தற்சார்பு' என்கிற தலைப்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக்.26 முதல் நவ.1-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இதையும் படிக்க | காலநிலை மாற்றத்திற்கு எதிரான முதலீட்டில் 9ஆவது இடத்தில் இந்தியா
அதன்படி, பெங்களூரு, எலஹங்காவில் உள்ள இந்திய பவர்கிரிட் கழகத்தின் தென்மண்டலம்-2 தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார தொடக்க விழா நடந்தது.
இந்த விழாவில் பவர்கிரிட் கழகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட நடைப் பயணத்தை பவர்கிரிட் கழகத்தின் செயல் இயக்குநர் எஸ்.ரவி தொடக்கி வைத்தார்.
இதையும் படிக்க | ‘ஆப்கனில் 400க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உள்ளனர்’: அமெரிக்கா
ஊழல் ஒழிப்பு விழிப்புணர் வாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையர் விடுத்திருந்த ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார செய்திகள் வாசிக்கப்பட்டன.
விழிப்புணர்வு வாரத்தில் பேச்சுப் போட்டி, முழக்கங்கள் எழுதும்போட்டி, சுவரொட்டி தயாரித்தல் போட்டி, வினாடி-வினா போட்டி போன்றவை ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், அரசு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.