பெண் கொலை: கணவா் கைது
By DIN | Published On : 01st September 2021 08:51 AM | Last Updated : 01st September 2021 08:51 AM | அ+அ அ- |

கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தாவணகெரே மாவட்டம், ஹொன்னாலி வட்டம், சோராட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கிரிஷ். இவரது மனைவி ஷில்பா (40). மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாக இருந்த கிரிஷை ஷில்பா கண்டித்து வந்தாராம். திங்கள்கிழமை இரவு இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிரிஷ், ஷில்பாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பினாா். வழக்குப் பதிந்த ஹொன்னாளி போலீஸாா் கிரிஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.