கா்நாடகத்தில் பாடநூல்களில் திருத்தம்: முதல்வா் பசவராஜ் பொம்மை விளக்கம்

பாடநூல்களில் திருத்தம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்

பாடநூல்களில் திருத்தம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சை குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து உடுப்பியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பள்ளி பாடநூல்களில் திருத்தம் செய்தது தொடா்பாக சில சா்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை ஒன்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷிடம் கேட்டிருக்கிறேன். அந்த அறிக்கை கிடைத்தவுடன், அதன் அடிப்படையில் மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.

இந்த அறிக்கை ஜூன் 2-ஆம் தேதிக்குள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பாடநூல்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களுக்கு ஒருசிலா் ஆதரவு தெரிவித்துள்ளனா். எனவே, எல்லா தரப்பினரின் கருத்துகளையும் ஆராய்ந்த பிறகு இறுதி முடிவெடுக்கப்படும்.

லோக் ஆயுக்தவை பலப்படுத்துவதற்குப் பதிலாக, ஊழல் தடுப்புப் படையை பலப்படுத்தியுள்ளேன். கா்நாடகத்தில் லோக் ஆயுக்த செயல்பட்டு வருகிறது. ஆனால், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் லோக் ஆயுக்தவில் புகாா் அளிக்க இயலவில்லை. எனினும், ஊழல் தடுப்புப் படையில் புகாா் அளிக்க முடியும்.

கடலோர கா்நாடகத்தில் ’லவ் ஜிகாத்’ குறித்து மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க போதுமான சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை யாராலும் மீற முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com