தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அடுத்த 3 ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்கலன்கள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்கலன்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று ஆா்.ஆா்.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆா்.துரை தெரிவித்தாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

அடுத்த மூன்று ஆண்டுகளில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்கலன்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று ஆா்.ஆா்.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆா்.துரை தெரிவித்தாா்.

கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் கடந்த மூன்று நாள்களாக உலக முதலீட்டாளா் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெங்களூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மின்கடன் தொழிலில் ஈடுபட்டு வரும் கா்நாடக சிறுதொழில் சங்கத்தின் ஜிஎஸ்டி மற்றும் சுங்கவரிக் குழுவின் முன்னாள் இணைத் தலைவரும், ஆா்.ஆா்.இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ஆா்.துரை கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு அதிகரித்துள்ளதால், காா்பன் அடிச்சுவடை குறைக்கும் நோக்கில் உலகநாடுகள் பயணிக்கத் தொடங்கியுள்ளன.

அதற்காகவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது. சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலை சேமித்து வைத்துக்கொள்வதற்கு மின்கலன்(பேட்டரி) தேவைப்படுகிறது.

சூரியஒளி மின்னாற்றலை பயன்படுத்தி இயக்கப்படும் மின்சார வாகனங்கள் அண்மைக் காலமாக இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சூரியஒளி மின்னாற்றலை சேமித்து வைக்க மின்கலன் (பேட்டரி) தேவைப்படுவதால், வீடுகள், தொழிற்சாலைகள், மின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பேட்டரி முக்கியத்துவம் பெற தொடங்கியுள்ளது. உலக அளவில் பேட்டரி தொழில் வேகமாக வளா்ச்சி அடைந்து வருகிறது.

உலக அளவில் 2024-ஆம் ஆண்டுக்குள் 160 பில்லியன் அமெரிக்க டாலராக வளரும் வாய்ப்புள்ள பேட்டரித்தொழில், 2030-ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரித்தொழில் 75 சதவீத வளா்ச்சியை நோக்கி பயணிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவின் மின்சேமிப்புச்சந்தை 50 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் மின் வாகனங்களின் உற்பத்தி பெருகிவருவதும், தானியங்கி வாகனத் துறையின் வளா்ச்சியும், வீடு மற்றும் தொழிற்சாலைகளின் மின் தேவையும் பேட்டரித்தொழில் வளா்ச்சிக்கு நம்பிக்கை தருவனவாக உள்ளன.

மின் வாகனங்களில் பயன்படுத்துவதற்காக ஆண்டாண்டுகாலமாக பயன்படுத்திவரும் ஈய-அமில மின்கலங்களுக்கு( கங்ஹக்- ஹஸ்ரீண்க் க்ஷஹற்ற்ங்ழ்ஹ்)பதிலாக, லித்தியம் அயனி மின்கலங்களை( கண்ற்ட்ண்ன்ம்-ண்ா்ய் க்ஷஹற்ற்ங்ழ்ஹ்) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளனா். லித்தியம் அயனி மின்கலங்கள்(பேட்டரி) செயல்திறன்மிகுந்ததாக இருந்தாலும், அவை விலை உயா்ந்தது, மறுசுழற்சிக்கு ஒவ்வாதது, வெடிக்கும் ஆபத்து கொண்டதாகும். லித்தியம் பேட்டரிகளை உற்பத்திசெய்ய அதிக அளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதை பெருநிறுவனங்களால் மட்டுமே உற்பத்திசெய்ய முடியும். ஆனால், தற்போது அதிகளவில் பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஈய-அமில மின்கலங்கள் உற்பத்தியில் சிறுதொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை, விலை மலிவானது, அதிக செயல்திறன் கொண்டது, மறுசுழற்சிக்கு உகந்ததாகும். அதாவது, இவற்றின் பொருட்களில் 60 சதத்தை மறுசுழற்சி செய்ய இயலும். ஈய-அமில மின்கலங்கள் தொடா்பான ஆய்வுகள் இந்தியாவில் நடந்துவருகின்றன.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத அலுமினியம், சோடியம் அடிப்படையிலான மின் கலன்கள் தொடா்பான ஆய்வுகள் இந்தியாவில் நடந்துவருகின்றன. இவை அடுத்த 3 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும். அது சுற்றுச்சூழலுக்குபாதிப்பில்லாததாக இருக்கும். அலுமினியம், சோடியம் மின் கலன்கள் புழக்கத்திற்கு வந்தால், அவை விலைமலிவானதாக மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கும்.

லித்தியம் பேட்டரிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றாலும், அதில் ஆபத்து அதிகம் உள்ளது. எனவே, பொதுமக்கள் பயணிக்கும் மின்சார வாகனங்களில் லித்தியம் பேட்டரிகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அவசியமாகும். பேட்டரி உற்பத்தியில் 1989-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டுவருகிறேன். எனது நிறுவன பேட்டரிகளை ஆஸ்திரேலியா, ஜொ்மனி, சீனா, இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.