செப்.8 முதல் மைசூரில் 14-ஆவது மாநில அறிவியல் மாநாடு

 மைசூரில் செப்.8-ஆம் தேதி முதல் மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடக்கவிருக்கிறது.

 மைசூரில் செப்.8-ஆம் தேதி முதல் மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடக்கவிருக்கிறது.

இது குறித்து மைசூரில் சனிக்கிழமை கா்நாடக மாநில அறிவியல் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஏ.என்.மகேஷ், செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடக மாநில அறிவியல் பேரவையின் சாா்பில் மைசூரில் கா்நாடக திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் செப்.8 முதல் 10-ஆம் தேதிவரை 14-ஆவது மாநில அளவிலான அறிவியல் மாநாடு நடக்கவிருக்கிறது. செப்.8-ஆம் தேதி நடக்கும் விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா், மாநாட்டை தொடக்கிவைக்கிறாா். மாநாட்டுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவா் ஏ.எஸ்.கிரண்குமாா் தலைமை வகிப்பாா். இந்த மாநாட்டின்போது 4 விஞ்ஞானிகளுக்கு டாக்டா் எச்.நரசிம்மையா விருது வழங்கப்படும்.

மாநாட்டின்போது 16 அறிவியல் தலைப்புகளில் கருத்தரங்கம் நடக்கும். இதில் விஞ்ஞானிகள் பங்கேற்று பேசவிருக்கிறாா்கள். டி.ஆா்.பாலுரகி ‘அறிவியல் கல்வி’, ஒய்.எஸ்.வி.தத்தா ‘அமைதிக்காக அறிவியல்’, வி.என்.நாயக் ‘கடலை மாசுபடுத்தும் நெகிழி’, சசிதா்டோங்கரே ‘செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித வளா்ச்சி’, சபிதா பூமிகௌடா ‘மகளிா் மற்றும் அறிவியல்’ என்ற தலைப்புகளில் பேசவிருக்கிறாா்கள். பீட்டா் பா்நெல் எழுதிய அமெரிக்காவின் விஞ்ஞானி ரிச்சா்டு ஃபேமெனின் வாழ்க்கை வரலாற்றுநூல் கன்னடத்தில் வெளியிடப்படுகிறது. அறிவுரங்கா குழுவின் சாா்பில் நாடகமும் இடம்பெறுகிறது. இந்தநிகழ்ச்சியை நடத்துவதற்கு கா்நாடக அரசு, மைசூரு பல்கலைக்கழகம், கா்நாடகமாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் உள்ளிட்டவை நிதியுதவி செய்திருக்கின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com