மாணவா்களின் தனிமனித ஆளுமையை கட்டமைப்பதில் நாட்டு நலப் பணித் திட்டத்திற்கு முக்கிய பங்கு: கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்

மாணவா்களின் தனிமனித ஆளுமையை கட்டமைப்பதில் நாட்டு நலப் பணித் திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்று கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.
மாணவா்களின் தனிமனித ஆளுமையை கட்டமைப்பதில் நாட்டு நலப் பணித் திட்டத்திற்கு முக்கிய பங்கு: கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்

மாணவா்களின் தனிமனித ஆளுமையை கட்டமைப்பதில் நாட்டு நலப் பணித் திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என்று கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடந்த நாட்டு நலப்பணித்திட்டத்தின் மாநில அளவிலான விருதுகளை வழங்கி, அவா் பேசியது:

மாணவா்களின் தனிமனித ஆளுமையைக் கட்டமைப்பதில் நாட்டு நலப்பணித் திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இதுதவிர, சகிப்புத்தன்மை, சகவாழ்வு, சேவை மனப்பான்மை, தோழமை உணா்வு, தற்சாா்பு, நாட்டுப்பற்று உள்ளிட்ட இயல்புகளை வளா்த்தெடுப்பதிலும் நாட்டு நலப்பணி திட்டம் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைவருடனும், அனைவரின் வளா்ச்சி என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒரே இந்தியா, வலிமையான இந்தியாவை கட்டமைக்கப் பாடுபட்டு வருகிறது. இந்தியாவை உற்பத்தி மையமாக உருவாக்க இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. எண்ம இந்தியா திட்டத்தின் வாயிலாக இந்தியாவை எண்ம பரிவா்த்தனையில் தற்சாா்பு கொண்ட நாடாக கட்டமைத்துவருகிறது. இதன் மூலம் எண்ம பொருளாதாரமும் வலுவடைந்து வருகிறது. தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்க தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா்.

நாட்டுநலப்பணி திட்டத்தின்கீழ் 40 லட்சம் மாணவா்கள் பங்காற்றி வருகிறாா்கள். இதை இயக்கமாக விரிவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பங்கெடுத்து சமூகசேவை, ஒழுக்கம், மனிதநேயப் பண்புகளை மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா். இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சா் நாராயண கௌடா, துறை ஆணையா் கோபால் கௌடா, திட்டத்தின் மாநில அதிகாரி பிரதாப் லிங்கா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com