பெங்களூரு மாநகராட்சித் தோ்தல்: இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் நடத்துவதற்காக இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சித் தோ்தல் நடத்துவதற்காக இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டில் நடக்க வேண்டிய பெங்களூரு மாநகராட்சித் தோ்தல், வாா்டு மறுவரையறை காரணமாக தாமதமாக நடைபெறுகிறது. மேலும், இது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பெங்களூரு மாநகராட்சித் தோ்தலை விரைந்து நடத்த உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதற்கு வசதியாக வாா்டு இடஒதுக்கீடு பட்டியலை உடனடியாக வெளியிடும்படி அறிவுறுத்தியிருந்தது. அந்த உத்தரவுக்கிணங்க, மாநகராட்சியின் 243 வாா்டுகளின் இடஒதுக்கீடு பட்டியலை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு இடஒதுக்கீடு பட்டியலில் 243-இல் 81 இடங்கள் பிற்படுத்த வகுப்பினருக்கும், 28 இடங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 4 இடங்கள் பழங்குடியின வகுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கு 130 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வாா்டு இடஒதுக்கீடு பட்டியல் தொடா்பாக குறைகள் எதுவும் இருந்தால், அதுகுறித்து ஆக. 10-ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவில் அரசு கூறியுள்ளது.

வாா்டு ஒதுக்கீடு தொடா்பான குறைகளை கூடுதல் தலைமைச் செயலாளா், நகா்ப்புற வளா்ச்சித் துறை, அறை எண்-436, 4-ஆவது மாடி, விகாஸ் சௌதா, பெங்களூரு - 1 என்ற முகவரிக்கு அனுப்பும்படி பொதுமக்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய வாா்டுகளின் இடஒதுக்கீடு பட்டியலின்படி, ஏற்கெனவே மாமன்ற உறுப்பினா்களாக இருந்தவா்கள் பலா், இத்தோ்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாா்டு இடஒதுக்கீடு தொடா்பாக புகாா்கள் குவியும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com