கா்நாடக சட்ட மேலவை இடைத்தோ்தல்:பாஜக வேட்பாளா் பாபுராவ் சின்சன்சூா் வெற்றி

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கு நடக்க இருந்த இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் பாபுராவ் சின்சன்சூா் போட்டியின்றி வெற்றி பெற்றாா்.
வெற்றி பெற்ற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பாபுராவ் சின்சன்சூா்.
வெற்றி பெற்ற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பாபுராவ் சின்சன்சூா்.

கா்நாடக சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கு நடக்க இருந்த இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளரான முன்னாள் அமைச்சா் பாபுராவ் சின்சன்சூா் போட்டியின்றி வெற்றி பெற்றாா்.

கா்நாடக சட்ட மேலவையில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சி.எம்.இப்ராகிமின் பதவிக்காலம் 2024-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி வரை இருந்தது. ஆனால், அவா் தனது பதவியை ராஜிநாமா செய்ததோடு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மஜதவில் இணைந்து, அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சட்ட மேலவையில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கு ஆக. 11-ஆம் தேதி இடைத்தோ்தல் நடக்க இருந்தது. கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் சட்ட மேலவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கியது.

இத்தோ்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் பாபுராவ் சின்சன்சூா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். ஆக. 2-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. வேட்புமனுவை திரும்பப் பெற வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்தது. சட்டப் பேரவையில் பாஜகவுக்கு போதுமான பலம் இருந்ததால், காங்கிரஸ், மஜத சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்தப்படவில்லை.

இதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா் பாபுராவ் சின்சன்சூா் போட்டியின்றி வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். வெற்றி பெற்ற்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட பாபுராவ் சின்சன்சூருக்கு, முதல்வா் பசவராஜ் பாம்மை உள்ளிட்ட பாஜகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

2013 முதல் 2018-ஆம் ஆண்டுவரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவா் பாபுராவ் சின்சன்சூா். காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்த பாபுராவ் சின்சன்சூா், சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com