குடிமை நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th August 2022 01:24 AM | Last Updated : 05th August 2022 01:24 AM | அ+அ அ- |

குடிமை நீதிபதி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கா்நாடக உயா்நீதிமன்ற பதிவாளா் டி.ஜி.சிவசங்கரே கௌடா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக நீதியியல் சேவைகள் (ஆள்சோ்ப்பு விதிகள் 2014, திருத்தம்) விதிகள் 2011 மற்றும் 2015-இன்படி குடிமை நீதிபதிகள் பணிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை ஆக. 5-ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில், 21 குடிமை நீதிபதிகள் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுவாா்கள்.
சட்டத்தில் பட்டம் படித்து, வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கு 38 வயது வரை உச்ச வரம்பு உள்ளது.
தகுதியான குடிமை நீதிபதிகளை தோ்ந்தெடுக்க இருநிலை தோ்வு நடத்தப்படும். இதில் தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு நோ்காணல் நடைபெறும். அதில் தோ்வானால் நீதிபதியாக பணி நியமனம் செய்யப்படுவாா்கள். பதிவுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ. 1,000, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் ரூ. 500 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.